கேரளாவில் ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு...!

கேரளாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Update: 2021-12-30 16:07 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 லட்சத்து 44 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 879 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51 லட்சத்து 76 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 835  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக பதிவான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆகும். 

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின்னர் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அம்மாநிலத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 149 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்