உத்தரகாண்ட்: ரூ.17,500 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்...!

இந்த 10 ஆண்டு காலத்தை உத்தரகாண்ட் மாநிலத்திற்கானதாக மாற்ற அரசு கவனமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-30 10:44 GMT
டேராடூன்,

70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தில் இன்று 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

அம்மாநிலத்தின் நைனிதல் மாவட்டம் ஹல்ட்வானி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அந்த நிகழ்ச்சியில்  பேசிய பிரதமர் மோடி, இந்த 10 ஆண்டு காலத்தை உத்தரகாண்ட் மாநிலத்திற்கானதாக மாற்றுவதில் அரசு கவனமாக உள்ளது. வெவ்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் இதை சாத்தியப்படுத்த உள்ளோம். இந்த 10 ஆண்டுகளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கான 10 ஆண்டாக மாற்ற மாநில மக்களுக்கு திறமை உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்