ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-12-30 01:46 GMT


அமராவதி,

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.  இவற்றில் இந்தியாவும் ஒன்று.  ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.  இந்தியாவில் 750 பேருக்கும் கூடுதலாக ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இவற்றில், ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஒமைக்ரான் பாதிப்பும் பதிவாகி வருகிறது.  ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், ஆந்திர பிரதேசத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து நோயாளிகளும் ஆரோக்கியமுடன் உள்ளனர்.  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.  ஒமைக்ரான் உறுதியான 10 பேரில் 6 பேர் ஆண்கள்.  4 பேர் பெண்கள் ஆவர்.



மேலும் செய்திகள்