பொருளாதார சரிவுக்கு மத்தியில் மோடிக்கு ஆடம்பர கார் தேவையா? - காங்கிரஸ் கேள்வி

பொருளாதார சரிவுக்கு மத்தியில் மோடிக்கு ஆடம்பர கார் தேவையா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-12-29 21:20 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி பயன்படுத்துவதற்காக தலா ரூ.12 கோடி விலையில் ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரகத்ைத ேசர்ந்த 2 ஆடம்பர கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு மறுத்திருப்பதுடன், மேற்படி காரின் விலை குறைவு எனவும் நேற்று விளக்கம் அளித்திருந்தது. 

இந்த நிலையில், கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்திருக்கும் நிலையில், பிரதமருக்கு ஆடம்பர கார் அவசியமா? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. மோடி தன்னை ஒரு துறவி என ஏற்கனவே கூறியிருந்ததை சுட்டிக்காட்டி கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், ‘ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறந்து, ரூ.20 கோடி காரில் பயணிக்கும், ரூ.2 ஆயிரம் கோடியில் வீடு கட்டும் மோடியைப் போல நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் துறவியாக இருக்க ஆசைப்படுகிறான்’ என்று குறைகூறினார். 

கடந்த 2 ஆண்டுகளில் வேலையை இழந்து, ஊதியத்தை இழந்து, வியாபாரத்தை இழந்து மக்கள் வாடிவரும் நிலையில், பிரதமரின் கார்களை மாற்றும் வேகம் மட்டும் குறையவில்லை எனக்கூறியுள்ள அவர், கடந்த 7 ஆண்டுகளில் 5 கார்களை மோடி மாற்றியுள்ளதாகவும், ஏன் இவ்வாறு கார்களை வாங்குகிறார்? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்