டெல்லியை மீண்டும் உலுக்கும் கொரோனா- நேற்றை விட 86 சதவீதம் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-12-29 14:38 GMT
புதுடெல்லி,

ஒமைக்ரான் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு  11 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தடம் பதித்துள்ள ஒமைக்ரான், 

படிப்படியாக தனது கோர முகத்தை காட்டத்தொடங்கியுள்ளது. கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவில் கணிசமாக கட்டுக்குள் இருந்தது.  ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் தொற்று பாதிப்பு காட்டுத்தீ போல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்றை விட 86 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று  923- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

ஆறுதல் அளிக்கும் வகையில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தொற்று பாதிப்பில் இருந்து  344 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,191- ஆக உள்ளது. டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,45,102- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,107- ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்