கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,846- பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பில் இருந்து 2,576- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர்.

Update: 2021-12-29 14:22 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,846- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  மேலும் 211 பேர் உயிரிழப்பு ஒரே நாளில் பதிவாகியுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 லட்சத்து 30 ஆயிரத்து 249- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 277- ஆக  உயர்ந்துள்ளது.

  கொரோனா பாதிப்பில் இருந்து 2,576- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,456- ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா பாதிப்பைக் கண்டறிய மேலும் 69 ஆயிரத்து 852 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 526- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 507 - பேருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் 348- பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்