சரத் பவார் மகள்-மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி

சரத் பவர் மகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான சுப்ரியா சூலே மற்றும் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-29 09:40 GMT
மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே (வயது 52). இவர் மராட்டிய மாநிலம் பாராமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யாவார்.

இந்நிலையில், சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேவுக்கும் அவரது மருமகன் சதானந்தாவுக்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சுப்ரியா சூலே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சதானந்திற்கும் எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை. எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கவனமாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்