எங்களுக்கு வாக்களியுங்கள் ரூ.50க்கு தரமான மது..! ஆந்திராவில் பா.ஜ.க. உறுதி

அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் நாங்கள் உங்களுக்கு ஒரு பாட்டிலை 50 ரூபாய்க்கு கூட கொடுக்கிறோம் என பா.ஜ.க மாநில தலைவர் உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-12-29 08:28 GMT
அமராவதி:

ஆந்திர மாநிலத்தில் 2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தரமான மது வகைகளை விற்பனை செய்வோம் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் சோமு வீரராஜு தெரிவித்துள்ளார்.

அமராவதியில் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் மாநில பா.ஜ.க.  மாநில தலைவர் சோமு வீரராஜு  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“ஆந்திராவில் 1 கோடி பேர் மது குடிக்கிறார்கள். அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். நாங்கள் உங்களுக்கு ரூ.75-க்கு மதுவை விற்பனை செய்கிறோம். 

நல்ல வருவாய் கிடைத்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு பாட்டில் 50 ரூபாய்க்கு கூட கொடுக்கிறோம். நிச்சயமாக மது மோசமானதாக இருக்காது, தரமான மதுவாக தான் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

ஆனால், ஆந்திராவில் தற்போது மதுவின் விலை அதிகபட்சமாக இருக்கிறது. ஆந்திராவில் மதுகுடிக்கும் ஒரு நபர் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 செலவு செய்கிறார். இந்த பணத்தை, மக்களிடம் ரத்தத்தை உறிஞ்சுவது போல் வசூலித்து, அந்த பணத்தை நலத்திட்டங்களாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்குகிறார்.

ஆந்திராவில் ஏராளமான வளங்கள், நீண்ட கடற்கரைகள் இருக்கின்றன, ஆனால், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசும், இதற்கு முன் ஆண்ட தெலுங்கு தேசம் கட்சியும் எதுவும் செய்யவில்லை.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அமராவதி நகரை தலைநகராக்கி, அடுத்த 3 ஆண்டுகளில் சிறப்பானதாக மாற்றுவோம். இடதுசாரிகள் நாட்டை அழித்துவிட்டார்கள்.”  

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்