உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம்; அரசு அறிவிப்பு
உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய அரசாணையில், இந்த அறிவிப்பு வருகிற 2022ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.