இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ், விக்ரம் மிஸ்ரி பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.

Update: 2021-12-28 07:39 GMT
புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான அனைத்து பணிகளையும் இந்த கவுன்சில் கவனித்து வருகிறது. இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி, நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவுக்கான இந்திய தூதராக 3 ஆண்டுகள் பணியாற்றிய இவர், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். 

இதற்கு முன்னர் ஸ்பெயின் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றியுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராகவும் விக்ரம் மிஸ்ரி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்