15-18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி; மத்திய சுகாதார செயலாளர் நாளை ஆலோசனை

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுடன் கொரோனா தடுப்பூசி தொடர்புடைய ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் நாளை நடைபெறுகிறது.

Update: 2021-12-27 17:04 GMT


புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது பற்றி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நாளை காலை 11.30 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் கொண்டோருக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி போடுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் செய்திகள்