அரியானா: பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!

முன்னே சென்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது, ​​நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது மோதியது.

Update: 2021-12-27 10:44 GMT
அம்பாலா,

அரியானா மாநிலம் அம்பாலா அருகே அம்பாலா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை டெல்லி நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டுருந்தது. 

அப்போது முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்களை முந்திச்செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அம்பாலா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்ததால் அவை கிரேன்கள் மூலம் நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து நடந்த பின்னர் பேருந்தின் ஓட்டுநர், அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். மேலும் அடையாளம் தெரியாத டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்