கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,407- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.407- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-25 16:00 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 2.407- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கேரளாவில் தொற்று பாதிப்பு இன்று குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3,377- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24,501- ஆக உள்ளது.  

தொற்று பாதிப்பைக் கண்டறிய 44,754 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்பு விகிதம் 5.37 சதவிகிதமாக உள்ளது.  கேரளாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46,318- ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 505 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 424- பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 177- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்