கரீனா கபூரின் மகன் பெயர் என்ன...? 6 ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி

6 ம் வகுப்பு தேர்வில் நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன என்று கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-25 10:33 GMT
கோப்புப்படம்
காண்ட்வா,

மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிக்கூடதில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் அந்த பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் நாட்டு நடப்புகள் (Current Affairs) பிரிவில் பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் ஆகியோரின் முழு பெயர் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

இது கேள்வி குறித்து சர்ச்சையான நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு அம்மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளியின் விளக்கத்தை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அந்த கேள்வித்தாளில் மேலும் 4 கேள்விகளாக இந்தியாவில் செஸ் விளையாட்டில் முதல் கிராண்ட் மாஸ்டர் யார் என கேள்வி எழுப்பியுள்ளது. அதுபோல் வான் வழி தாக்குதலின் போது பாகிஸ்தானில் விழுந்தது எந்த இந்திய விமான படை விமானியின் விமானம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணி வென்றது, வடகொரியாவின் அதிபர் யார் என்று கேட்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்