மராட்டியத்தில் மேலும் 20 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-24 15:35 GMT
மும்பை,

மராட்டியத்தில் மேலும் 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 108- ஆக உயர்ந்துள்ளது. 54 பேர் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இன்று ஒமைக்ரான் பாதித்தவர்களில் 15 பேர் பயண தொடர்பு உள்ளவர்கள்.  ஒமைக்ரான் பாதிப்பு  உள்ள அனைவருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை. இவர்களில் 12 பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இந்தத் தகவல்களை மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்