மராட்டியம்: காரை இடைமறித்து மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை
மராட்டிய மாநிலத்தில் காரில் வந்த மல்யுத்த வீரரை கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பீம்புரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் கலாரி (வயது 37). மல்யுத்த வீரரான இவர் நேற்று இரவு 9 மணியளவில் ஷெல்பிம்பல்ஹான் பகுதியில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரது காரை இடைமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு நாகேஷ் கலாரியை பல முறை சுட்டனர். இதில் உடலில் 6 குண்டுகள் பாய்ந்த தனது காரிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றுவிட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட நாகேஷின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.