படிப்பதற்கு போட்டி போட மறந்து, பையனுக்காக இரு மாணவிகள் குடுமிப்பிடி சண்டை..!

ஆந்திராவில் ஒரு ஆணுக்காக, இரு பெண்கள் நடத்திய குடுமிப்பிடி சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-12-23 06:03 GMT
அமராவதி,

ஆந்திரா மாநிலம் அனகாபல்லி பகுதியில், இளைஞர் ஒருவருடன் மாணவி ஒருவர் சென்றுள்ளார். இதைப் பார்த்த மற்றொரு பெண், அந்த மாணவியிடம் கேள்வி எழுப்பி, வாக்குவாதம் செய்தார். 


இதனால், இருவருக்கும் குடிமிப்பிடி சண்டை வந்தது. இருவரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், வெவ்வேறு பள்ளியில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவிகள் என்பது தெரியவந்தது. இருவரையும் எச்சரித்த அனுப்பிய நிலையில், அந்த இளைஞரிடம் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்