ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-22 11:19 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ஒமைக்ரான் பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கலாசார நிகழ்வுகள் அன அனைத்து விதமான  கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என மார்க்கெட் வர்த்தக கூட்டமைப்புகளுக்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் இதுவரை 57 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்