ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு
ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
அமராவதி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், கென்யாவில் இருந்து சென்னை வழியாக திருப்பதி வந்த 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.