2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘கும்பல் கொலை’ என்பது கேள்விப்படாத வார்த்தை - ராகுல்காந்தி

2014-ம் ஆண்டுக்கு முன்பு ‘கும்பல் கொலை’ என்பது கேள்விப்படாத வார்த்தை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார்.

Update: 2021-12-21 23:00 GMT
புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் பொற்கோவிலிலும், கபூர்தலாவிலும் கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக்கொல்லும் சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன.

இந்தநிலையில் இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், ‘‘2014-ம் ஆண்டுக்கு முன்பு, ‘கும்பல் கொலை’ என்ற வார்த்தையை யாரும் கேள்விப்பட்டது இல்லை. நன்றி மோடிஜி’’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா, ‘‘சீக்கியர்கள் படுகொலையை நியாயப்படுத்திய ராஜீவ்காந்தியின் மகன்தான் ராகுல்காந்தி’’ என்று தெரிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த நிருபர்கள், பா.ஜனதாவின் எதிர்கருத்து பற்றி கேட்டனர். அதனால் கோபம் அடைந்த ராகுல்காந்தி, ‘‘பா.ஜனதாவுக்காக மத்தியஸ்தம் செய்யாதீர்கள்’’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்