ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக கேரளா சென்றார்

4 நாள் பயணமாக கேரளா சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

Update: 2021-12-21 18:24 GMT
கண்ணூர்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக நேற்று கேரளா சென்றார்.விமானப்படை சிறப்பு விமானம் மூலம் மனைவி, மகளுடன் கண்ணூர் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், உள்ளாட்சித் துறை மந்திரி எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின்னர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டர் மூலம் காசர்கோடு புறப்பட்டுச் சென்றார்.

காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.பின்னர் கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகள்