'83' திரைப்படத்திற்கு டெல்லி மாநில அரசு வரிவிலக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியை மையமாக கொண்ட '83' திரைப்படத்திற்கு டெல்லி மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
புதுடெல்லி,
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
தயாரிப்பாளர் மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கும் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி டெல்லியில் 83 திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.