இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

ஒமைக்ரான் பரவல் நிலையில், பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

Update: 2021-12-21 13:48 GMT
புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.  கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் ஒமைக்ரன் அடியெடுத்து வைத்தது. இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. மொத்தம் 202 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.  அதில், ஒமைக்ரான் டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது எனவும்  பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு  மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும் செய்திகள்