தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 3 வயது குழந்தை பலி
டெல்லியில் மூன்று வயது குழந்தையை, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில், குழந்தை பலியானது.
புதுடெல்லி:
டெல்லியின் மோதி நகர் பகுதியில், மூன்று வயது குழந்தையை, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில், குழந்தை பலியானது.
இது குறித்து டெல்லி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பூங்கா ஒன்றில், 3 வயது குழந்தை லட்சுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கூட்டமாக வந்த நாய்கள், குழந்தையைக் கடித்துக் குதறியுள்ளது.கடந்த டிசம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
நாய்கள் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினர்.
உடனடியாக குழந்தையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.