7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா கூட ஊழல்' இல்லை - மத்திய மந்திரி பேச்சு

பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 7 பைசா கூட ஊழல் இல்லை என்ற மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.

Update: 2021-12-19 11:05 GMT
டேராடூன்,

உத்தரகாண்டில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-

காங்கிரஸ் 2ஜி, 3ஜி என பல ஊழல்களை செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா கூட ஊழல்' என்றுக்கூட காங்கிரஸ்காரர்களால் குற்றம்சாட்ட முடியாது. 

ராகுல் காந்தி முதல் சோனியா காந்தி வரை யாராலும் பிரதமர் மோடியை 7 பைசா கூட ஊழல் செய்தார் என குற்றம் சாட்ட முடியாது. ஊழலற்ற வளர்ச்சி சார்ந்த அரசை நாங்கள் வழங்கி உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்