ரூ.80 லட்சத்துக்கு விலைபோன எருமை மாடு : ஆர்வத்துடன் செல்பி எடுத்த மக்கள்
எருமை மாடு ஒன்று ரூ.80 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
மராட்டிய மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று ரூ.80 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது .சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டிடம் செல்பி எடுக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .
எடையை பராமரிக்க இந்த மாடு ஒரு நாளுக்கு 15 லிட்டர் பால் குடிப்பதாகவும் ,நான்கு வேலையும் கரும்பு ,புற்கள் உட்கொள்வதாகவும் மாட்டின் உரிமையாளர் கூறியுள்ளார் .இனப்பெருக்கத்துக்கு இந்த வகை மாடுகள் பெரிதும் உதவும் என்பதால் பல லட்சம் கொடுத்து வாங்க விவசாயிகள் போட்டி போட்டுள்ளனர்.