எஸ்டிபிஐ, பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து படுகொலை - கேரளாவில் பதற்றம்

அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் கேரளாவின் ஆலப்புழாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2021-12-19 07:01 GMT
ரஞ்சித் சீனிவாசன்- கே.எஸ்.ஷான்
திருவனந்தபுரம்,

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் மர்ம நபர்களாள் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த  கே.எஸ். ஷான் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பா.ஜ.கவின் ஒபிசி மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசனை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். கே.எஸ் ஷான் இறந்த 12 மணி நேரத்திற்குள்  பா.ஜ.க தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஷான் கொலைக்கு பழிக்கு பழியாக பாஜக நிர்வாகி ரஞ்சித் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

அடுத்தடுத்த  கொலை சம்பவங்களால் கேரளாவின் ஆலப்புழாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்