இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 137 கோடி
இந்தியாவில் செலுத்திய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 137 கோடியை கடந்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்களும் அதற்கான முகாம்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று இரவு 7 மணி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 137,37,66,189 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, இன்று ஒரே நாளில் 69,21,097 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.