டெல்லியில் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்..!
டெல்லியில் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓடுகிற டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேலாக இயங்குகிற பெட்ரோல் வாகனங்களையும் பதிவு செய்யவும், இயக்கவும் கட்டுப்பாடுகள் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகள் பிறப்பித்தது.
அதன்படி அங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிற அனைத்து டீசல் வாகனங்களை மறுபதிவு செய்வது வரும் ஜனவரி 1-ந் தேதி தொடங்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.