2 பில்லியன் பயனாளர்களை தாண்டிய இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் தளம், 2 பில்லியன் பயனாளர்களை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,
உலகின் மிக பெரிய சமூக வலைதள ஜாம்பவான்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். உலகம் முழுவதும் இதனை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
இந்தநிலையில், கடந்த ஜூன் 2018-ல் 1 பில்லியனை கடந்திருந்த எண்ணிக்கை 3 வருடங்களில் இரு மடங்காக ஆகி உள்ளது. ரீல்ஸ் அறிமுகம், டிக்டாக் தடை போன்றவையால் கடைசி சில மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.