நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் இல்லை..?!

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-12-15 20:57 GMT
புதுடெல்லி, 

இணையத்தில் புழங்கும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்படவில்லை. அவற்றை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளும் இல்லை. இருப்பினும், சமீபகாலமாக அவற்றில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதனால், தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவும், ரிசர்வ் வங்கி சார்பில் அதிகாரபூர்வ டிஜிட்டல் பணம் வெளியிடவும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியது. சபை அலுவல் பட்டியலிலும் இம்மசோதா இடம்பெற்றது.

ஆனால், இந்த மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வராது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எப்போது மசோதா கொண்டு வந்தாலும், அது நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்