சீன செயலிகள் மீதான தடையை நீக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
சீன செயலிகள் மீதான தடையை நீக்கும் திட்டம் இல்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக 224 சீன மொபைல் செயலிகள் (ஆப்) கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டன. அந்த செயலிகளுக்கு தடை நீக்கப்படுமா? என்று நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், ‘‘இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கக் கூடியது என்பதால் சீன மொபைல் செயலிகள் மீதான தடையை நீக்கும் திட்டம் இல்லை’’ என்று கூறினார்.