கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி...!!

கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-15 17:20 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம், 

உலகம் முழுவதும் தற்போது ஓமைக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தலைநகர் டெல்லி, மராட்டியம், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ், 77க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவி உள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 65க்கும் மேலாக உயர்ந்தது. 

வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்தத் தொற்று, இரண்டு, மூன்று நாட்களாக தென்னிந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவில் ஒமைக்ரான் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவைத் தவிர, தற்போது மராட்டியம் (32), ராஜஸ்தான் (17), கர்நாடகா (3), குஜராத் (4), தெலங்கானா (2), மேற்கு வங்காளம் (1) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (1), டெல்லி (6) மற்றும் சண்டிகர் (1) தமிழகம் (1). ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்