மராட்டியத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

மாராட்டியத்தில் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-15 14:57 GMT
மும்பை,

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று அதிகவேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் அத்தொற்று அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ள நிலையில் அங்கு அத்தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 68- ஆக உயர்ந்துள்ளது. 


மேலும் செய்திகள்