ஜாமீன் நிபந்தனை: ஆர்யன் கானுக்கு விலக்கு அளித்தது மும்பை ஐகோர்ட்டு

ஆர்யன் கான், வெள்ளிக்கிழமை தோறும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை மும்பை ஐகோர்ட்டு தளர்த்தியுள்ளது.

Update: 2021-12-15 09:11 GMT
மும்பை,

மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் கோவா சென்ற சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். 

ஆர்யன் கானின் நண்பர் அர்பாஸ் மெர்ச்சன்டிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் உரையாடல் மூலம் ஆர்யன் கானுக்கும் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த வழக்கில் ஆர்யன் கானுக்கு அக்டோபர் 28-ந் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது மும்பை ஐகோர்ட்டு, சிறப்பு கோர்ட்டு அனுதியின்றி வெளிநாடு செல்ல கூடாது, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் உள்ளிட்ட 14 நிபந்தனைகளை விதித்தது.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை தோறும் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆர்யன் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து  இருந்தார். 

இதை விசாரித்த மும்பை ஐகோர்ட், வெள்ளிக்கிழமை தோறும்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பும் நேரத்தில் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆர்யன் கான் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்