அசாமில் ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.1 லட்சம்

அசாமில் அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

Update: 2021-12-15 00:05 GMT




கவுகாத்தி,

அசாமில் தேயிலை தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன.  மலை பிரதேசம் அதிகமுள்ள பகுதிகளில் தேயிலை பயிர் செய்யப்படுகிறது.  இதில், பல வகைகள் உள்ளன.  அவற்றின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த தேயிலையில் மனோகரி கோல்டு என்ற அரிய வகை தேயிலை அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது.  அசாமில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் இந்த தேயிலையானது கிலோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம் என விற்பனை ஆனது.  இதனை வடகிழக்கு தேயிலை கூட்டமைப்பின் ஆலோசகர் பித்யானந்தா பர்காகோட்டி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்