இந்தியாவில் 2020ல் சராசரியாக தினமும் 31 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்...!
கடந்த ஆண்டு மட்டுமே 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் சுமார் 11,396 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி
சிறார் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே ஒரு நாளுக்கு 31 இளம் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ’கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சிறார்கள் தற்கொலை கணக்கெடுக்கப்பட்டது. அதில், 2018யில் 9431 சிறார்கள், 2019யில் 9613 சிறார்கள் மட்டும் 2020 11, 396 சிறார்கள் எனத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து, உள்துறை இணை மந்திரி அஜய் குமார் மிஷ்ரா நாடாலூமன்ரத்தில் வெளியிட்ட தகவ்லில் கூறி இருப்பதாவது:-
மாணவர்கள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வை ஏற்பப்படுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர், என அனைத்து துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதில், இந்த கொரோனா காலகட்டத்தில் சிறார் முதல் பெரியவர் வரை மன ரீதியாகப் பாதிக்கப்படியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், கடந்த மூன்று வருடமாகச் சிறார் தற்கொலை குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி வருகிறார். மாணவர்களின் மன நலனைக் காக்கும் வகையில் மனோதர்பன் திட்டம் உள்ளது. இந்த இணையதளம் இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள், குறிப்புகள், காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு 270 ரூபாய் கட்டணம் செய்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி போன்ற அமைப்பின் மூலம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.