கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு
இரண்டு நாள் பயணமாக சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
வாரணாசி,
கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8-ம் தேதி ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார்.
வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோயில் வளாகம்-1 திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கட்டுமான தொழிலாளர்களுடன் சேர்ந்து மதிய உணவை பிரதமர் மோடி அருந்தினார்.
பின்னர் வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் விவேகானந்த் சொகுசு படகில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகளும் உடன் சென்றனர். இதையடுத்து, கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.