கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,434- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,434- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43,170- ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 85 ஆயிரத்து 210- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 4,308-பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 51,16,928- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 36,281- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 50,446- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 525- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 428- பேருக்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் 315- பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.