ஆந்திரா, கேரளாவிலும் பரவியது ஒமைக்ரான் தொற்று: இந்தியாவில் பாதிப்பு 38 ஆக உயர்வு
ஆந்திரா, கேரளாவிலும் ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவியது. இதைத்தொடர்ந்து புதிய வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
அதிவேகமாக பரவி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், கடந்த 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
60 நாடுகளில் பரவியது
இந்த வைரஸ், கடந்த19 நாளில் ஏறத்தாழ 60 நாடுகளில் கால்தடம் பதித்துள்ளது.
இந்தியாவில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகள், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகிறவர்கள், விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்தியாவில் நுழைந்தது
இந்த நிலையில் அந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நமது நாட்டிற்குள் நுழைந்தது. கர்நாடக மாநிலத்தில் 66 வயதான தென் ஆப்பிரிக்கர், 46 வயது பெங்களூரு டாக்டர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி மாநிலங்களிலும் கால்தடம் பதித்தது. இந்தியாவில் நேற்று முன்தினம் நிலவரப்படி 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
ஒரு நாளில்5 பேருக்கு பாதிப்பு
இந்த வைரஸ் நேற்றுஆந்திரா, கேரள மாநிலங்களிலும், சண்டிகார் யூனியன் பிரதேசத்திலும் நுழைந்து, தலா ஒருவருக்கு பாதித்துள்ளது.
அத்துடன் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலா மேலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 5 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்
இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
ஆந்திராவில் அடியெடுத்து வைத்தது
ஒமைக்ரான் வைரஸ் நேற்று ஆந்திர மாநிலத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. இங்கிலாந்தின் அங்கமான அயர்லாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள 34 வயது வெளிநாட்டு பயணிக்கு இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இவர் அயர்லாந்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கியபோது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், பாதிப்பு இல்லை என வந்தது. அதைத் தொடர்ந்து அவர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் செல்ல அனுமதிக்க்கப்பட்டது.
அங்கு விஜயநகரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தியதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரது சளி மாதிரி, மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதை ஆந்திர மாநில சுகாதார துறை நேற்று அறிவித்தது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை.
கேரளாவில் கால்தடம் பதித்தது
ஒமைக்ரான் வைரஸ், கொரோனாவை இன்றளவும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிற கேரள மாநிலத்திலும் தனது கால் தடத்தை நேற்று பதித்தது.
இங்கிலாந்தில் இருந்து கடந்த 6-ந் தேதி கொச்சி திரும்பிய எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது என மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
அவரது மனைவி, தாயாருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
“பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை திருப்தியாக உள்ளது. புதிய வைரசை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதால் யாரும் பதற்றம் அடையத்தேவையில்லை” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான நபர் வந்த விமானத்தில் அவருடன் 149 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சண்டிகாரிலும் நுழைந்தது
யூனியன் பிரதேசமான சண்டிகாரிலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்திருக்கிறது.
இத்தாலியில் இருந்து தனது உறவினர்களை பார்க்க சண்டிகாருக்கு வந்த 20 வயது வாலிபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி இங்கு வந்த இவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தினார். அவருக்கு சென்ற 1-ந் தேதி கொரோனா உறுதியானது. இப்போது அவரது சளி மாதிரிக்கு மரபணு வரிசைப்படுத்தல் சோதனை நடத்தியதில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. இவர் இத்தாலியில் 2 ‘டோஸ்’ பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் 2-வது முறையாக நேற்றும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கர்நாடகம், மராட்டியத்தில் மேலும் ஒருவர்
கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஏற்கனவே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள 34 வயது நபர் ஆவார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 17 பேர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. முடிவு வர வேண்டி இருக்கிறது. இந்த தகவல்களை அந்த மாநில சுகாதார மந்திரி டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
இதே போன்று மராட்டிய மாநிலத்தில் 17 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான நிலையில், மேலும் ஒருவருக்கு அந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்று விட்டு மராட்டிய மாநிலம், நாக்பூருக்கு வந்துள்ள 40 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
அவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரி, மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படட்து. அதில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை நாக்பூர் மாநகராட்சி கமிஷனர் பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாதிப்புக்குள்ளானவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
38 ஆக உயர்வு
இந்தியாவில் இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டியத்தில் 18 பேர், ராஜஸ்தானில் 9 பேர், குஜராத்தில் 3 பேர், கர்நாடகத்தில் 3 பேர், டெல்லியில் 2 பேர், ஆந்திரா, கேரளா மற்றும் சண்டிகாரில் தலா ஒருவர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விமான நிலையங்களில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.