இத்தாலி இளைஞருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி
இத்தாலியில் இருந்து சண்டிகார் வந்த இளைஞருக்கு ஒமைக்ரான் பாதித்த நிலையில் குடும்பத்தின் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
சண்டிகார்,
இத்தாலி நாட்டில் வசித்து வரும் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த நவம்பர் 22ந்தேதி இந்தியாவுக்கு வந்துள்ளார். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவரான அவர் சண்டிகாரில் தனது உறவினர்களை சந்திக்க சென்றார்.
அந்த பயணி அறிகுறிகளற்று இருந்த நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் கடந்த டிசம்பர் 1ந்தேதி மீண்டும் நடந்த கொரோனா பரிசோதனையில், அவருக்கு பாதிப்பு உறுதியானது.
இதனால், விதிகளின்படி தனியார் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டார். புதுடெல்லியில் நடந்த மரபணு பரிசோதனையின் முடிவு நேற்றிரவு அவருக்கு கிடைத்தது. இதில், பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதனை சண்டிகார் சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு நடந்த பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஒருவருக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. ஒருவருக்கு முடிவு இன்னும் வரவில்லை.