மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் இன்று பேரணி...

மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் இன்று பேரணி நடத்த உள்ளது.

Update: 2021-12-12 02:12 GMT
புதுடெல்லி,

விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில் இந்த மாபெரும் பேரணி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்க உள்ளது. விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரஸ் பேரணி நடத்த உள்ளனர். இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். 

இந்த பேரணியில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெய்ப்பூரில் திரண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்