மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.7 ஆக பதிவு
மிசோரமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
அய்சாவல்,
மிசோரமின் அய்சாவல் நகரில் இருந்து வடமேற்கே 31 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் நள்ளிரவில் ஏற்பட்ட நிலையில், தூக்கத்தில் இருந்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.