பிபின் ராவத் உடலுக்கு இலங்கை உள்பட பல்வேறு நாட்டு ராணுவ தளபதிகள் அஞ்சலி

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு இலங்கை உள்பட பல்வேறு நாட்டு ராணுவ தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2021-12-10 10:50 GMT
புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், இன்று காலை 11:00 மணிக்கு, டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.  அங்கு  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து காமராஜ் மார்க் வழியாக டெல்லி கண்டோன்மெண்ட் பகுதிக்கு  பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, இலங்கை,  பூடான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ தளபதிகள் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்று  இறுதி அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகள்