போலீஸ் நடவடிக்கையில் எந்த விவசாயிகளும் உயிரிழக்கவில்லை - மத்திய அரசு

விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையில் எந்த விவசாயிகளும் உயிரிழகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-12-10 10:32 GMT
புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். 

கடந்த 29-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதான் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், டெல்லி எல்லையில் நடைபெற்று போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கையில் எந்த விவசாயிகளும் உயிரிழக்கவில்லை. பிற காரணங்களால் போராட்ட களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்குவது அந்தந்த மாநில அரசுகளின் முடிவாகும்’ என்றார். 

மேலும் செய்திகள்