நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ந் தெதி தொடங்கியது. டிசம்பர் 23-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது.
இந்நிலையில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அனுராக் தாகூர், பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.