இந்தியாவில் 2 நாட்கள் குறைந்து மீண்டும் அதிகரித்த தொற்று: ஒமைக்கரான் காரணமா?

நேற்றைய பாதிப்பை விட 23% கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-08 04:26 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 8,439 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 

இந்தியாவில் ஒரே நாளில் 9,525 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 93,733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,79, 612 லிருந்து 3,40,89,137 ஆக உயர்ந்துள்ளது.  நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.36% என்றளவில் உள்ளது. 

ஒரே நாளில் கொரோனாவுக்கு 195 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,73,757 லிருந்து 4,73,952 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 129.54​​​​​​​ கோடி ஆக உள்ளது இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் தொற்று எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்