மேல்-சபை தேர்தலில், பா.ஜனதா 16 தொகுதிகளில் வெற்றி பெறும் - எடியூரப்பா

மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா 16 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் நாட்டில் 26 மாநிலங்களில் பலத்தை இழந்துவிட்டது.

Update: 2021-12-06 00:09 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா சாம்ராஜ்நகர் மாவட்டம் சந்தேமாரனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா 16 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் நாட்டில் 26 மாநிலங்களில் பலத்தை இழந்துவிட்டது. கர்நாடகத்தில் மட்டும் சிறிது மூச்சு இழுத்து விடும் அளவுக்கு உள்ளது. நான் பதவியை ராஜினாமா செய்தாலும், கட்சியை பலப்பத்தும் பணியை கைவிட மாட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை 130 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க வைப்பேன். சித்தராமையா பா.ஜனதா குறித்து கடுமையாக விமர்சிக்கிறார். அவரது விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டேன். கிராமம், கிராமமாக சென்று கட்சியை பலப்படுத்தி வருகிறேன். பசவராஜ் பொம்மை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்