மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி அடுத்த வாரம் நேபாளம் பயணம்

நேபாள ஆளும் கட்சியான நேபாள காங்கிரசின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்ய இருப்பதாக மம்தா தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-05 06:57 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் நேபாளம் செல்கிறார். நேபாள ஆளும் கட்சியான நேபாள காங்கிரசின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்ய இருப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். 

காத்மாண்டுவில் வருகிற 10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் நேபாள காங்கிரசின் 14ஆவது தேசிய மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். 

தங்கள் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்க வருமாறு மேற்கு வங்க முதல்வருக்கு நேபாள காங்கிரசின் தலைவர் ஷேர் பகதூர் தூபா அண்மையில் அழைப்பு அனுப்பியிருந்தார்.

மேலும் செய்திகள்