உ.பி.க்கு வரும் 7ந்தேதி பிரதமர் மோடி; பயணம் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
உத்தர பிரதேசத்தில் வருகிற 7ந்தேதி ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
கோரக்பூர்,
பிரதமர் மோடி வருகிற 7ந்தேதி உத்தர பிரதேசத்திற்கு வருகை தருகிறார். அதன்பின் கோரக்பூர் நகரில் அவர் ரூ.9,600 கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.